வட கொரியாவின் இரண்டாவது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. வட கொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரவ ஒக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது என்று முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தேசிய விண்வெளி தொழில்நுட்ப நிர்வாகத்தின் துணை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.