தமது ஆட்சிக்காலத்தில் அரச சேவை மறுசீரமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த மறுசீரமைப்பு மூலம் அரச சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதுடன் அரச ஊழியர்களினால் மக்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரச சேவை மேம்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தங்களது ஆட்சிக் காலத்தில் அரச பணியாளர்கள் வினைத்திறனான முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்குவது உறுதி செய்யப்படுமென விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.