தமக்கு பாதுகாப்பு தொடர்பில், எந்தவித  பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது போதியளவான பாதுகாப்பு தமக்கு கிடைக்கப்பெறுவதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்,  அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார் .

எனினும், குறித்த வழக்கு தற்போது, நீதிமன்றில் நிலுவையில் உள்ளதால் அது தொடர்பில், தாம் எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here