சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கடந்த திங்கட்கிழமை (5) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக நான் குறிப்பிடவில்லை.
மேலும் ஏற்றுமதி செய்தால் நாட்டுக்கு நல்லது பயனற்ற விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என மட்டுமே தெரிவித்தாக கூறியுள்ளார்.
இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன ‘ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா தொடர்பில் பேசப்படவுமில்லை கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் எவ்வித பத்திரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டு கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக வெளியான செய்தியை நிராகரித்தார்.
கஞ்சா ஏற்றுமதி செய்தால் நாட்டுக்குப் பயன் கிடைக்கும், ஏற்றுமதி செய்யாவிட்டால் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.
காலம் காலமாக வெறும் விமர்சனங்களையும், பழைய கதைகளையும் மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.