கதிர்காம உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கதிர்காம உற்சவம் நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களிலிருந்து எரிபொருள், முச்சக்கரவண்டிகளின் பெட்டரி உட்பட உதிரிப்பாகங்கள் திருடப்படுவதால் அங்கு வருகை தரும் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், உற்சவத்திற்கு வருகை தரும் மக்களின் கையடக்கத் தொலைபேசிகள் திருடப்படுவதுடன் பல்கலைக்கழக மாணவியொருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Post Views: 2