காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று (16) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்டவர்களுக்கு இன்று காலை விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நாளை (17) பருத்திதுறை, மருதங்கேணி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளுக்கான விசாரணைகள் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், 18ஆம் திகதி யாழ்ப்பாணம், சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை மற்றும் வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் விசாரணைகள் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.