நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது.
முதலாது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Captitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் லக்னோ சுப்பர் கைண்ட்ஸ் (Lucknow Super Giants) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் லக்னோ சுப்பர் கைண்ட்ஸ் (Lucknow Super Giants) அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
லக்னோ அணி சார்பாக மார்கஸ் ஸ்டோனிஸ் (Marcus Stoinis) 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் தர்ஷன் நால்கண்டே (Darshan Nalkande) மற்றும் உமேஸ் யாதவ் (Umesh Yadav) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும், ரஷீத் கான் (Rashid Khan) ஒரு விக்கட்டையும் குஜராத் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் 18.5 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
குஜராத் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சாய் சுதர்ஷன் (Sai Sudharsan) 31 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
லக்னோ அணிக்கு யாஷ் தாக்கூர் (Yash Thakur) 5 விக்கட்டுக்களையும், க்ருணால் பாண்டியா (Krunal Pandya) 3 விக்கட்டுக்களையும், ரவி பிஷ்னோய் (Ravi Bisnoi) மற்றும் நவீனுல் ஹக் (Naveen-ul Haq) ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக லக்னோ வீரர் யாஷ் தாக்குர் (Yash Thakur) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் லக்னோ அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது நிலைக்கு முன்னேறியுள்ளது.