Tamil News Channel

கெப்டன் விஜயகாந்த் காலமானார்!

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காலமானார்.

மியாட் மருத்துவமனையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இனிக்கும் இளமை எனும் படத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான விருதகிரி திரைப்படம் வரை முதன்மை கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

மேலும் இவர் 100 வது படமான கெப்டன் பிரபாகரன் திரைப்படத்தின்  பாரிய வெற்றியின் பின்னர் சினிமா ரசிகர்களால் கெப்டன் விஜயகாந்த் என அழைக்கப்பட்டார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அதன்பிறகு அவர் தே.மு.தி.க கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த மாதம் 18ம் திகதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் பூரண குணமடைந்து கடந்த டிசம்பர் 11ம் திகதி அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனையடுத்து கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார் விஜயகாந்த்.

இந்நிலையில் நேற்று இரவு  உடல் சுகவீனமடைந்த நிலையில்  இன்று அதிகாலை விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி 6.15 மணியளவில்  உயிரிழந்துள்ளார்.

இவரது பூதவுடல் நாளை மாலை 4.45 மணியளவில் கட்சி அலுவலகத்தில் வைத்து நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts