கொங்கோ நாட்டில் இபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் இபோலா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 906 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை உகாண்டாவிலும் ஒன்பது இபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு கொங்கோவில் கடந்த இரண்டு மாதங்களாக இபோலா நோய்ப் பரவல் ஏற்பட்டு வருகிற நிலையில் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை அறிவித்துள்ளது.








