முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை குறித்துத் தான் தெரிவித்த கருத்துகளுக்காக தினியவல பாலித தேரர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த ,ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் பெந்தாரா பிரிவின் பிரதம சங்கநாயக்கரான அவர், ஜூன் 03 அன்று நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது கோட்டாபாயவின் பயணத் தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பயணத் தடையைக் கண்டித்ததை ஒப்புக்கொண்ட அவர், நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

தனது கருத்துக்கள் முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் கூறப்பட்டதாகவும், அந்தத் தடை ஒரு நீதிமன்ற உத்தரவு என்பதை அப்போது தான் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் விளக்கினார்.

இது தொடர்பில் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்திய பாலித தேரர், ஒரு பிக்குவாகத் தான் எப்போதும் சட்டத்தை மதிப்பதாக தெரிவித்தார்.

தனது முந்தைய அறிக்கையைத் திரும்பப் பெறுவதாகவும், ஏற்பட்ட தவறான புரிதலுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் அவர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here