கொழும்பு – பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழுபேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.