இந்நாட்டின் மிகவும் அனுபவம் வாய்ந்த, சிரேஷ்ட மற்றும் நன்மதிப்பு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவரான மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியின் மகளான திருமதி சஞ்சல குணவர்தன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
மங்கள சமரவீரவின் மரணத்தின் பின்னர் அவரது குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு பிரவேசித்த முதல் நபராக சஞ்சல குணவர்தனவை குறிப்பிடலாம்.
இவ்வாறு அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமித்துள்ளார்.