இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டி இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
இதன்படி 20 ஓவர்களில் 03 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
202 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.
ஹைதராபாத் அணி சார்பில் நிதிஷ் ரெட்டி 76 ஓட்டங்களையும், டிரவிஸ் ஹெட் 58 ஓட்டங்களையும், கிளாசன் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் அணி சார்பில் ரியான் பராக் 77 ஓட்டங்களையும், ஜெய்ஸ்வால் 67 ஓட்டங்களையும், ரோவ்மேன் பாவெல் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 03 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார்.