பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் முதற்தர செல்வந்தருமான தம்மிக்க பெரேரா, சிறிலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இலங்கையின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையை தனியார் முதலீட்டாளரிடம் கையளிப்பதற்கான விருப்ப மனுக் கோரல் அண்மையில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில் சிறிலங்கன் விமானசேவையை கொள்வனவு செய்வதற்காக ஏழு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
அவற்றில் தம்மிக்க பெரேரா, 51 வீதப் பங்குகளைக் கொண்டுள்ள ஹேலீஸ் நிறுவனமும் உள்ளடங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.