சமீப காலமாக உலக நாடுகளிடையேயான போர் அதிகரிப்பால் அந்நாடுகள் இராணுவத்திற்கு செலவிடும் தொகை உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த S I R P I என்ற இராணுவ செலவின ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காசா போன்ற போர் மோதல்களினால் இந்த செலவு மேலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி உலகம் முழுவதும் இராணுவத்திற்கான செலவு சுமார் 2.4 ட்ரில்லியன் டொலராக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் 54 சதவிகிதமும், ரஷ்யா, இஸ்ரேல் நாடுகள் 24 சதவிகிதமும் ராணுவ நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளன.

இதேவேளை சீனாவால் அச்சுறுத்தலை சந்திக்கும் ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இராணுவ செலவை 11 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here