இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இதன்படி சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகளை திறக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (ஒக்டோபர் 15) விடுமுறை வழங்கப்படுவதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களுக்கும், கொலன்னாவ மற்றும் கடுவெல கல்விப் பிரிவுகளுக்கும் உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும் எனவும் மேல்மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.








