எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வுகளிலும் பங்குபற்றி வருகின்றார்.

அந்தவகையில் நேற்றைய தினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். இந்த பேருந்தானது சுமார் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

மாணவர்களின் நலன் கருதி பேருந்து ஒன்றினை வழங்குமாறு பாடசாலை சமூகத்தினர் எதிர்க்கட்சித் தலைவரிடம் நேரடியாக கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர். அந்தவகையில் நேற்றைய தினம்  இந்த பேருந்து வழங்கி வைக்கப்பட்டது.

வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பேருந்துக்கான பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன. அதன்பின்னர் மாணவர்களை ஏற்றி, எதிர்க்கட்சித் தலைவர் பாடசாலை வரை பேருந்தை செலுத்திச் சென்றார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண இணைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், கட்சியின் உறுப்பினர்கள், கல்லூரியின் அதிபர் திருமதி சுலபாமதி, பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here