அன்று மகாகவி பாரதியார் சொன்னதை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் செந்தில் தொண்டமான் தலைமையில் இலங்கையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் போன்றவற்றை நிகழ்த்தியமைக்காகவே இந்த பாராட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டர் பதிவில் தமிழ் பாரம்பரியத்தை மீட்டெடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமானை அகமகிழ்ந்து வாழ்த்துவதாக கவிதை ஒன்றின் மூலம் பதிவிட்டுள்ளார்.