Tamil News Channel

செம்பியனானது பங்களாதேஷ்

துபாயில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியகிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றைய தினம்(17) பங்களாதேஷ் அணி மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.

இதில் 195 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று செம்பியனானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மனித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் Ashiqur Rahman Shibli அதிக பட்சமாக 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் Ayman Ahamed ஐக்கிய அரபு இராச்சியம் சார்பாக 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஐக்கிய அரபு இராச்சியம் 24.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

பந்து வீச்சில் Rohanat Doullah Borson மற்றும் Maruf Mridha ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் பங்களாதேஷ் அணி வீரர் Ashiqur Rahman Shibli  தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts