முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் குறித்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் என்பவற்றை கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடும்படி வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் அடிப்படையில், ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவது குறித்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் இன்று உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் நகைகளை தமிழக உள்துறை அமைச்சக அதிகாரிகள் சரிபார்த்து பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.