நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் வகையில் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அவர் முன்வைத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதனால் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் முன்னதாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில், பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்யும் நோக்கில் தாம் 22ம் அரசியலமைப்பு திருத்தமொன்றை கொண்டு வந்ததாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.