கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாட்டாளர்களைத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் கினிகத்தேனையில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாவலப்பிட்டி நகரசபை,பார்கேபல்,வெஸ்டோல்,ஹைட்ரி,இம்புல்பிட்டிய,கடியலென ஆகிய பகுதிகளின் அமைப்பாளர்கள் இதன் போது கலந்து கொண்டனர்.
அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரனும் கலந்து கொண்டார்.