Wednesday, July 29, 2026
No menu items!

தமிழ் முற்போக்கு கூட்டணி

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிதி சுதந்திரம் அவசியம் – சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

தேர்தல்கள் ஆணைக்குழு உண்மையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமானால், அதன் செயற்பாடுகளுக்கு தேவையான நிதி சுதந்திரம் கட்டாயமாக இருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையான அளவிலான...

எனி தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என கூறிய மனோகணேசன்..!

இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதனை ஒரு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார். அத்துடன், தமது கட்சியில் அடுத்த கட்ட தலைவர்களைத் தாம் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி..!

தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தலவாக்கலையில் மே தின பேரணி மற்றும் அணிவகுப்பை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தப் பேரணி தலவாக்கலை நகராட்சி மன்ற மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே தின பேரணி மற்றும் அணிவகுப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்...

இந்திய தூதுவர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இடையே சந்திப்பு..!

இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்புகளை செயற்பாடுகளுக்கு மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்தியாவின் விசேட கடப்பாட்டை வலியுறுத்தினோம் என த.மு.கூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய தூதுவர் சநாதோஷ் ஜாவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு...

மாவை சேனாதிராசா தமிழ் தேசியத்தின் அடையாளம்; மனோ கணேசன்!

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் மறைவு தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள...

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி..!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது சின்னத்தில் போட்டியிடுவதற்கு கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் ஆரம்பத்தில்...

தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க தமது கட்சி எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வியடைந்தது; மனோ கணேசன்!

கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் கிடைக்காது போனமை வருத்தமளிப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் சாத்திய படவில்லை. தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆட்சி அமைக்கும் அனுர குமார திசாநாயக்க அரசுக்கும்...

எதிர்வரும் பத்தாம் பாராளுமன்றத்தில் தாம் ஒரு அழுத்த அணியாக இடம் பெற வேண்டும் ; மனோ கணேசன்!

பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள பத்து வேட்பாளர்களும் வெல்ல வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த கௌதம புத்தனை போல் பேசுகின்ற நபர்களை நான் என் அரசியல் வாழ்வில் பலமுறை...

52 சதவீதமான மக்கள் ஜனாதிபதியை நிராகரித்துள்ளனர்; இராதாகிருஷ்ணன்!

ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், 52 சதவீதமான மக்கள் அவரை நிராகரித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   <!-- -->

வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட மனோகணேசன்!

இலங்கையின் எட்டு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களில் ஒரு பகுதியினர் இன்று(10.10) வேட்பு மனுவில் கைச்சாத்திட்டனர். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார். இரத்தினபுரி மாவட்டத்தில் சந்திரகுமாரும், கண்டி மாவட்டத்தில் அண்மையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வெளியேறிய பாரத் அருள்சாமியும்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img