உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் (12) தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பிரதேசத்தை சேர்ந்த  18 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் மாணவி தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிறுமியை அயலவர்கள் மீட்டு புதுக்குடியிருப்பு ​வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மாணவி  உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here