இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் கடலோர மாகாணங்களுக்கிடையே தீவிர வானிலை நிகழ்வுகளும் தேசிய அனர்த்த முகாமைத்துவ தயார்நிலை திட்ட மொழிவுகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நேற்றையதினம் பிற்பகல் யாழ் தனியார் திருநெல்வேலி தின்ன விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இதில் சிவில்,சமூக கடற்றொழிலாளர்களூடான கால நிலைமாற்றம், வளிமண்டல அவதானம், அனர்த்த முகாமைத்துவம், கரையோரப்பாதுகாப்பு,தொடர்பாகவும் இயற்கை அனர்த்தம் ,அவசர தொடர்பாடல் தொடர்பில் குறித்த நிகழ்ச்சித்திட்டமும் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.
இதில் வளிமண்டலவிய திணைக்கள நிகழ்ச்சித் திட்ட அதிகாரி நிமல் பண்டார,யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் என்.சூரியராஜா,மற்றும் யாழ் மாவட்ட கரையோர பாதுகாப்பு பிரிவின் அலுவலகர் பொறியிலாளர், உள்ளிட்ட, துறைசார்ந்த அதிகாரிகள், பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.