ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 408 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் ஒன்று வன்முறைச் செயலும் , 392 தேர்தல் விதிகளை மீறிய முறைப்பாடுகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் திகதி  அறிவிக்கப்பட்டதில் இருந்து வேட்புமனு தாக்கல் வரை பதிவாகும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் தேர்தல் வன்முறைகள் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here