இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான T20 தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம்(22) பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 19.3 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக பில் சால்ட் 38 ஓட்டங்களையும் லியம் லிவிங்ஸ்டன் 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்துவீச்சில் குடகேஷ் மோடி 3 விக்கட்டுக்களையும் அன்றே ரஸல், ஜேஸன் ஹோல்டர் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
133 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கட்டுக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஸாய் ஹோப் 43 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் ரீசி டொப்லி மற்றும் அதில் ரஸீத் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக குடகேஷ் மோடி தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை தொடரின் நாயகன் விருதை இங்கிலாந்து அணி வீரர் பில் சால்ட் பெற்றிருந்தார்.