Tamil News Channel

நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு..!

நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த  விசேட  வர்த்தமானி அறிவித்தலின்படி, ஜூன் 30, 2026 வரை நன்மைகளைப் பெறும் குறிப்பிட்ட நபர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட வர்த்தமானியில் , நன்மைகள் பெற தகுதியுள்ள ஒரு பிரிவினருக்கு உதவித்தொகை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

மற்றொரு பிரிவினருக்கு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி நிவாரணம் வழங்கப்பட இருந்தது.

ஆனால்  ஜனாதிபதியினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நிவாரணப் பலன்களுக்கு உரித்தான  சிலருக்கு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி  வரையிலும் ஏனையோருக்கு 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலும்  பலன்கள் வழங்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts