விசா காலாவதியான நிலையில் குவைத்தில் பணிப்பெண்களாக பணியாற்றிய 26 இலங்கையர்கள் இன்று இலங்கை தூதரகத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

குவைத்தில் இதுபோன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளனர்.

அவர்களையும் குழுக்களாக நாட்டுக்கு அழைத்து வரப்படுவதாகவும் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரக அதிகாரிகள் குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை மீளப் பெறவும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராத தொகையை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், விமானப் பயணச்சீட்டு இல்லாத இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு விமான டிக்கெட்டுகளை வழங்க குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here