Tamil News Channel

நாடு மீண்டும் வங்குரோத்து அடையும் ; சம்பிக்க ரணவக்க..!

champika ranavakka

நாட்டில் யார் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டாலும் எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்படும் புள்ளிவிபரத் தகவல்கள் குறித்து விஞ்ஞானபூர்வமான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளத்தாக தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிழையான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதென  சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தங்களது கணித அறிவினை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை வியட்னாம், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணங்கள் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் அதிகமாக அறவீடு செய்பய்படுவதனால் கைத்தொழிற்துறை பாதிக்கப்படுவதாகவும் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் நாடு வங்குரோத்து அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மின்சார சபையின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts