உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்த 50 பில்லியன் யூரோ தொகை தொடர்பில் 26 நாடுகள் ஒப்புக்கொண்ட பின்னர் ஹங்கேரி பிரதமரால் அதை முறியடிக்க முடியாது என்று நேற்று முன்தினம்(16) உதவிப் பேச்சுவார்த்தையில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த உதவிப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை , உக்ரைனுடன் உறுப்பினர் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடிவு செய்த சிறிது நேரத்திலேயே, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் அந்த நாட்டுக்கான நிதியுதவி தொடர்பான தடையை அறிவித்தார்.
முன்னதாக 61 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இராணுவத்தளபாட உதவி தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஒப்புதல் கோரியிருந்தார்.
ரஷ்யப் படைகளுக்கு எதிராக 660 நாட்களாக தொடர்ந்து போரிட்டு வருவதால், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் நிதியுதவியை முழுமையாக சார்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.