இதயத்துடிப்பு நின்று போன ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பென் வில்சன் வீட்டில் இருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு அவரது காதலி ரெபெக்கா ஹோம்ஸ் மீது சாய்ந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவர்  மருத்துவமைனையில் சேர்க்கப்பட்டார்.

 அங்கு சுயநினைவின்றி இருந்த அவருக்கு மருத்துவர்கள் CPR வழங்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் 50 நிமிடங்களுக்கு இடையில் இரண்டே முறை தான் இதயம் துடித்துள்ள நிலையில், அவருக்கு 17 முறை டீஃப்ரிலேட்டர் (defibrillator) மூலம் எலெக்ட்ரிக் கரன்ட் செலுத்தப்பட்டது.

மருத்துவ ரீதியாக மாரடைப்பு ஏற்பட்டு இதயத்துடிப்பு நின்றுவிட்டதாகக் கூறப்பட்டாலும், கணிப்பைத் தாண்டி பென் வில்சன் அதிலிருந்து மீண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here