நீண்டதூர பேருந்துகள் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் இயக்க ஆரம்பிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் ரத்நாயக்க 6 முக்கிய அடிப்படை காரணிகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.








