பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கூச்சலிட்ட நபர்களுக்கு எதிராக வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ வை ஆதரித்து லக்கல, ஹெட்டிபொல நகரில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் பிரசார கூட்டத்திற்கு மது போதையில் வந்த நபர்கள் சிலர் அங்கு உரையாற்றிக் கொண்டிருந்த நாலக பண்டார கோட்டேகொட எம்.பிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் அவர் தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here