இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் பீடி இலைகளை புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக புத்தளம் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று (30) குறித்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது சுமார் 39 உறைகளில் 1230 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பில் எவரும் இதுவரை  கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகள் சுமார் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாமென்றும் பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகளை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here