November 18, 2025
புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு : 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு : 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை

Jan 11, 2024

நேற்றைய தினம்(10) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால்  பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

அச் சட்ட மூலத்தில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின்படி,  இருபது ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனையுடன் 1 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நெடுஞ்சாலையிலோ அல்லது பொது இடத்திலோ மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் தொடர்புடைய குற்றத்திற்காக மேல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு இந்த தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இந்நாட்டில் மாத்திரமன்றி விமானம் அல்லது கப்பலில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பிலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலத்தின்படி கொலை, பணயக்கைதிகள் அல்லது கடத்தல் ஆகியவை குற்றமாகும்.

மேலும் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு கடுமையான சேதம் விளைவிப்பது, பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை உருவாக்குவது மற்றும் எந்தவொரு மத அல்லது கலாச்சார சொத்துக்களையும் அழிப்பது அல்லது தீவிரமாக சேதப்படுத்துவது ஆகியவையும் குற்றமாகும்.

அத்துடன் இந்த சட்டமூலத்தின்படி, கொலைக் குற்றத்திற்காக மேல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *