January 23, 2026
போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது!!!
புதிய செய்திகள்

போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் கைது!!!

May 29, 2024

நேற்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை வவுனியா குருமன்காடு பகுதியில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் தலைமையிலான விசேட சோதனை நடவடிக்கையின் போதே பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *