இடம்பெறவுள்ள தீர்மானமிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க மகிந்த ராஜபக்சவை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து சாகர காரியவசத்தை நீக்கி அந்த பதவிக்கான பிரேரணையை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கும் யோசனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட சபை நேற்று (01.08) மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் பாலட்டுவ எல்.எச்.கே ஹோட்டலில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.