சீனாவின் ‘சாங்கே 6’ விண்கலம் நிலவின் இருண்ட பகுதியிலிருந்து மாதிரிகளை சேமிக்கும் நோக்கிலேயே கடந்த மே மாதம் 3ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டிருந்து.

குறித்த விண்கலத்தில் மண் மாதிரிகளைச் சேகரிக்க ஒரு இயந்திரக் கை பொருத்தப்பட்டு, துளையிட்டு, தோண்டியதன் பின்னர் மண் எடுக்கப்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுமார் 2 கிலோகிராம் அளவுடைய மண் மாதிரிகளை வெற்றிகரமாக பூமிக்கு கொண்டு வந்தால், இந்த நடைமுறையில் வெற்றியீட்டிய முதல் நாடாக சீனா இருக்கும்.

இந்த மண் மாதிரிகளை ஆய்வு செய்வதனால், பூமி, சந்திரன், சூரியக் குடும்பம் ஆகியவற்றின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி தொடர்பான தடயங்களை விஞ்ஞானிகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் ஜூன் 25ஆம் திகதி குறித்த விண்கலம் சீனாவின் மங்கோலியாக பகுதியின் பாலைவனத்தில் வந்து தரையிறங்கும் என சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here