Tamil News Channel

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் போராட்டம்!

human rights

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்னால் நேற்றைய தினம் [27] போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அதிபர் சேவை சங்கத்தினர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்கள்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தினை பெற்றுதரக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தனவினால் எட்டு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கையளிக்கப்பட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts