November 18, 2025
மன்னாரில் எண்ணெய்–எரிவாயு ஆராய்ச்சி: விரைவில் சர்வதேச டெண்டர்க்கு அறிவிப்பு!!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

மன்னாரில் எண்ணெய்–எரிவாயு ஆராய்ச்சி: விரைவில் சர்வதேச டெண்டர்க்கு அறிவிப்பு!!

Nov 4, 2025

மன்னாரில் எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு ஆராய்ச்சிக்கான மேம்பாட்டுபணிகளின் சர்வதேச டெண்டர்கள் தொடர்பில் அறிவிப்புவெளியிடப்படவுள்ளது.

குறித்த அறிவிப்பு, அடுத்த மாத முதல்வாரத்தில் அறிவிக்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அதிகாரிஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கிலஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயுவளங்களுக்கான சர்வதேச டெண்டர்செயல்முறையை மேலாண்மை செய்யசர்வதேச ஆலோசணைக் குழுவைதேர்ந்தெடுக்க இலங்கை அரசு அழைப்புத்விடுத்திருந்தது.

இந்த நிலையில் ஆலோசனைக்குழுநியமிக்கபடாவிட்டாலும் ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டுக்கான புதிய டெண்டர்கள்விரைவில் அறிவிக்கப்படுமென அந்தஅதிகாரியை மேற்கோள் காட்டிகுறித்தசெய்தி மேலும் தெரிவிக்கிறது.

பல்நாட்டு மற்றும் தேசிய எண்ணெய்நிறுவனங்கள் பல இந்த டெண்டர்செயல்முறையில் பங்கேற்கஎதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த டெண்டர் சுமார் நான்கு முதல் ஐந்துமாதங்கள் திறந்திருக்கும்,என்ரு ” குறித்தஅதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்கதலைமயிலான தேசிய மக்கள் சக்திஅரசாங்கம் இந்த செயல்முறையைவிரைவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்தஅதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்காக மன்னார் வளைகுடாவில் உள்ளநான்கு கிணறுகள் திறக்கப்படவுள்ளன.

இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனமான Cairn Lanka Limited, 2011ஆம் ஆண்டு இரண்டு ஆராய்ச்சிகிணறுகளைத் தோண்டியது.

அப்போது Barracuda மற்றும் Doradoஎனும் களங்களில் இயற்கை எரிவாயுஇருப்பது கண்டறியப்பட்டது.

இலங்கை அரசாங்கம் 2020 செப்டம்பரில்தேசிய இயற்கை எரிவாயு கொள்கையைஅறிவித்தது.

இது உள்நாட்டு தேவையை உருவாக்கவும்,கடல்சார்ந்த எரிவாயு வளங்களைவணிகரீதியாக பயன்படுத்துவதற்கானவாய்ப்புகளையும் வழங்குகிறது.அதேபோல, 2021 ஆம் ஆண்டில்Petroleum Resources Act No. 21 என்றசட்டமும் இயற்றப்பட்டது.

கட்டார், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் நிறுவனங்கள் இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சிதிட்டங்களில் பங்கேற்பதில் ஆர்வம்செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த 2021 ஆம் ஆண்டு,மன்னாரில் சுமார் 267 பில்லியன் அமெரிக்கடொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும்எரிவாயு வளங்கள் உள்ளதாக பாராளுமன்றஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில்தெரிவிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *