மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரிவின் இலுப்பைக்கடவை பகுதியில் நேற்று மாலை மாவட்ட அரச அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் சாரதா கல்விக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இடம்பெற்றுள்ளது.
பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ர்.ரி.ஈசிகோ பவுண்டேசனின் கீழ் இயங்கும் சாரதா கல்விக்கூடமானது கடந்த சில வருடங்களாக மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கல்விகற்கும் மாணவர்களின் நலனுக்காக பல தொடர்ச்சியான கல்விசார் உதவிச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறனர்.
மன்னார். இலுப்பைக்கடவை தழிழ் மகாவித்தியாலயத்துடன் இணைந்து இப் பணியை முன்னெடுத்து வருகிறது.
அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாகவே முற்றும் இலவசமாக மாணவர்களுக்கான மாலைநேரக் கல்வி வசதியுடன் ஆழுமை மற்றும் திறன்விருத்திசார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் சாரதா கல்விக்கூட வளாகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவானது இலுப்பைக்கடவை குண்டுக்கமம் பகுதியில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரச அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
அலுவலக திறப்புவிழா, தற்காலிக கல்விச்செயற்பாட்டுக் கட்டடம் போன்றவையும் திறந்துவைக்கப்பட்டதுடன், சாரதா கல்விக்கூட தன்னார்வ தொண்டர்களுக்கான கௌரவிப்பு, கிராமத்து முதன்மைச் செயற்பாட்டாளர்களுக்கான கௌரவிப்பு மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேச செயலர் திரு.டெ.க.அரவிந்தராஜா, மன்னார் மடுவலய கல்விப்பணிப்பாளர் திருமதி.அ.கி.வொலன்ரைன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு.டென்சில் பெர்ணாண்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் நிகழ்வில் கிராமமட்ட அமைப்புகள் சார்பானவர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், கிராம மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.