முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதியுயர் தலைவருமான மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவை வழங்க வேண்டுமென சாகல ரத்நாயக்க மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை அரசியல் உயர்பீடத்துடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








