மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு (29) ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 30 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகி, பலத்த சேதமடைந்துள்ளன.
மாவனல்லை பொஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கடையொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.