முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாயொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்றைய தினம் (07) அதிகாலை நடைபெற்றுள்ளது.

கேப்பாபிலவு பகுதியிலுள்ள ஆறாவது காலாட்படையில் கடமையாற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய லான்ஸ் கோப்ரல் நிலையுடைய சிப்பாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது உயிரிழப்பு தொடர்பில் இராணுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here