இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எம்.ஆர்.எம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, நேற்றைய தினம் (22) கையளித்துள்ளது.
2023 அக்டோபர் மாதத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதிகரிக்கப்பட்ட அதே சதவீதத்தில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக மின் கட்டணத்தை 3 சதவீதத்தினால் குறைப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்ததுடன்,
அது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கோரலில், அதனை விட அதிக சதவீதத்தில் மின் கட்டணத்தை குறைக்க கூடிய இயலுமை, இலங்கை மின்சார சபைக்கு உள்ளதாக பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.