கிறிஸ்மஸ் தீவு என அழைக்கப்படும் கிரிபாட்டி தீவிற்கு அடுத்தபடியாக முதல் நாடாக நியூசிலாந்து 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடியுள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று (2023.12.31) 4.30 மணியளவில் நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு ஆரம்பமாகியுள்ளது.
இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசு, வானவேடிக்கைகளுடன் அந்நாட்டு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடிவருகின்றனர்.