கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆணையிறவு சோதனை சாவடிக்கு முன்னால் இன்று காலை 09.08.2024 விசுவமடு ரெட்பான பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் இருவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பொழுது வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இராணுவத்தின் சோதனைச் சாவடியில் மோதுன்டு அதேசமயம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதித்தள்ளியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விசுவமடு ரெட்பான பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் கலையரசன் என்னும் 21 வயது உடைய இளைஞனே இவ் விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இச் சம்பவத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







