Wednesday, June 18, 2025

யாழில் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி..!

Must Read

கனடாவிற்கு அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ். செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி கட்டம் கட்டமாக ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கி மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட நபர் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக பேருந்தில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்மணி பகுதியில் பேருந்தினை மறித்து சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

ஈரான் தாக்குதலுடன் இணைந்து காசாவிலும் தாக்குதல் – இஸ்ரேலின் இருமுனை இராணுவ நடவடிக்கைகள்!

ஈரான் மீது நடத்திய தாக்குதலுடன் இணைந்து, இஸ்ரேலின் இராணுவம் காசா நிலப்பரப்பிலும் தமது தரைப்படை நடவடிக்கைகளைத் தொடர்ந்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு காசாவில், ஜபலியாப் பகுதியில் இஸ்ரேலின் 162வது...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img