இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், வயதான கேங்ஸ்டர் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இந்த திரைப்படம் அமையும் எனவும் தகவல் அண்மையில் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார்.

“நாங்கள் இருவரும் இணைந்து முன்னரே நடித்திருக்க வேண்டும். வியாபாரம் ரீதியாக நாங்கள் சேராமல் இருந்தோம். இப்பொழுது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here